“பாதுகாத்தலும் சேவையும்” என்ற நோக்கத்தை நிறைவேற்ற தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கும் காவலர் ப்ரையன் லாரன்ஸ். ஆனால் தப்பியோடும் இருவருடன் தற்செயலாக அவர் மோதவேண்டியிருந்தது. முகத்தில் உதைக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே செயலிழந்து போனது. ப்ரையன் தன் குடும்பத்தையும் கடவுளையும் நேசிக்கிறவர். பிறருக்கு உதவுகிறவர். அவர் வாழ்க்கை முழுவதுமே போதைபொருட்கள் கடத்தலைத் தடுப்பதும், இளம் தலைமுறையினரை வெற்றி வாழ்க்கைக்கு ஊக்கப்படுத்துவதும், சமூக நலனுக்கான திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதாகவுமே இருந்தது. தனது வருங்கால மருமகளுக்கு ஒரு வாக்கு கொடுத்திருக்கிறார். அவளது தகப்பனுக்குப் பதிலாக அவளை திருமணநாளில் ஆலயத்தில் மணமகனின் கைகளில் கைப்பிடித்துக் கொடுப்பதுவே அந்த வாக்கு. ஆனால் தீய நிகழ்வான அந்த உதைக்குப்பின்னர் அவரது உலகம் முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. இங்கே அவர் எந்த உதவியும் இன்றி இருக்கிறார். இனி அவரால் நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தான் செய்த வாக்கை நிறைவேற்றுவதில் எந்த மாற்றமும் செய்யமுடியாது என்று உறுதியாக இருக்கிறார்.
#movie #film #fullmovie #entertainment

Be the first to comment